December 5, 2025, 6:11 PM
26.7 C
Chennai

IND Vs NZ Test: நியூஸி வெற்றி பெற எளிய இலக்குதான்!

ind vs nz test series - 2025
#image_title

இந்தியாநியூசிலாந்து முதல் டெஸ்ட் –  பெங்களூரு – நான்காம்நாள் – 19.10.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா அணி (முதல் இன்னிங்க்ஸ் – 46,ஹென்றி 5-15, ஓ ரூர்க் 4-22, இரண்டாவதுஇன்னிங்க்ஸ் (462, ஸர்ஃப்ராஸ் கான்  150, ரிஷப்பந்த் 99, விராட் கோலி 70, ரோஹித் ஷர்மா 52, ஜெய்ஸ்வால் 35, மேட் ஹென்றி 3/102, ஓ ரூர்கே3/92, அஜாஸ் படேல் 2/100); நியூசிலாந்துஅணி (402, கான்வே91 ரன், ரச்சிந்த்ரா 134, டிம்சௌதீ 65, வில் யங் 33, ஜதேஜா 3/72, குல்தீப் 3/99, சிராஜ் 2/84, பும்ரா 1/41, அஷ்வின்1/94); இரண்டாவது இன்னிங்க்ஸ்0/0; இந்திய அணி 107ரன்கள் முன்னிலையில் உள்ளது.

          நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில்462 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இதனால் நியூசிலாந்துஅணியின் வெற்றிக்கு 107 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், இந்திய அணி தோல்வியை தவிர்க்கபோராடுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

          2001ஆம் ஆண்டு கொல்கத்தாமைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடியது. இந்தப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணிமுதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி வெறும் 171 ரன்கள்மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால்ஆஸ்திரேலியா அணி ஃபாலோ ஆன்கொடுத்தது. 274 ரன்கள் பின் தங்கிய நிலையில்இந்திய அணி 2வது இன்னிங்ஸைதொடங்கியது. அன்றைய நாளில் இந்திய அணி டிரா செய்யக்கூட வாய்ப்பில்லை என்று பார்க்கப்பட்டது. ஆனால் வி.வி.எஸ். லக்‌ஷ்மண் – ராகுல்டிராவிட் இருவரும் ஒருநாள் முழுக்க பேட்டிங் செய்து ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். 2வது இன்னிங்ஸில் இந்தியஅணி 657/7 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதன்பின் ஆஸ்திரேலியா அணி 212 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிகச்சிறந்த வெற்றி இதுதான். ஃபாலோ ஆன் பெற்ற பின்இந்திய அணி ஃபீனிக்ஸ் பறவையாகமீண்டெழுந்து மிரட்டியது.

          தற்போது அப்படியான ஒரு ஆட்டத்தை 23 ஆண்டுகளுக்குபின் மீண்டும் இந்திய அணி வீரர்கள் வெளிப்படுத்தினர்.பெங்களூர் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில்46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின்களமிறங்கிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணி 2வது இன்னிங்ஸை356 ரன்கள் பின் தங்கிய நிலையில்தொடங்கியது. டிரா செய்வதற்கே மிகப்பெரியதிட்டம் தேவை என்ற நிலைஇருந்தது.

வரலாறு படைத்த சர்ஃபராஸ் கான்

          இதனால் மழை வந்துதான் இந்திய அணியை காப்பாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருதினர். ஆனால் டிரா செய்வது எங்களின்திட்டமல்ல.. வெற்றி பெறுவதே எங்களின் திட்டம் என்று அட்டாக்கிங் ஸ்டைலில் இந்திய அணி பொளந்து கட்டியது. கேப்டன் ரோஹித் சர்மா 63 பந்துகளில் 52 ரன்களும், விராட் கோலி 102 பந்துகளில் 70 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதன்பின் சர்ஃபராஸ் கான் – ரிஷப் பண்ட் இருவரும் சிறப்பாக ஆடினர்.

          இந்திய வீரர்களுக்கு ஸ்பின்வீசினால் என்ன நடக்கும் என்பதைஇருவரும் பேட் மூலம் பதிலாகஅளித்தனர். 356 ரன்கள் பின் தங்கியதை பற்றிஎந்த கவலையும் கொள்ளாமல், அசால்ட்டாக அந்த ரன்களை எட்டினர்.சர்ஃபராஸ் கான் அபார சதமும்,ரிஷப் பண்ட் அரைசதமும் அடித்து அசத்தியதன் மூலமாக இந்திய அணி ஃபீனிக்ஸ் பறவையாய்மீண்டது. இந்திய அணியின் ஸ்கோர் 400 ரன்களை கடந்ததோடு, நியூசிலாந்து அணியை விடவும் 50 ரன்கள் முன்னிலை பெற்றது. இன்னும் இந்திய அணியின் கைகளில் 7 விக்கெட்டுகள் இருந்ததால், நிச்சயமாக வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்பட்டது.

இந்திய அணியின் சரிவு

          ஆனால் அடுத்த சில ஓவர்களிலேயே இந்தியஅணியின் பேட்ஸ்மேன்கள் சீட்டுக் கட்டைப் போல் சரிந்தனர். இதனால்இந்திய அணி 2வது இன்னிங்ஸில்462 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதனால்நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 107 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடைசி நாள் ஆட்டத்தின் இந்திய அணியின் ஸ்பின்னர்களான அஸ்வின், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் மூவரை எதிர்த்து பேட்டிங் செய்வது எளிதான விஷயமல்ல. ஆனால் போதிய இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை என்பதால், இந்திய அணியை காப்பாற்ற மழை வந்தால் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories