
அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெரும்பாலும் அமைதி மற்றும் உலக ஒற்றுமை, வளர்ச்சி குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தனக்கான வாழ்வின் அடிநாதம் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற தொடக்க காலப் பயிற்சியே என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது.
இதில், ஆர்.எஸ்.எஸ்., அனுபவங்கள் குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டவை…
எங்கள் பகுதியில் ஆர்எஸ்எஸ்.,ஸின் ஷாகா நடக்கும். ஷாகாவில் விளையாட்டுக்களோடு தேசபக்திப் பாடல்கள் பாடுவோம். அது மனதுக்கு இதமாக இருக்கும் மனதுக்கு அது பெரும் உற்சாகத்தை அளிக்கும். இப்படித் தான் நாங்கள் சங்கத்தில் இணைந்தோம்.
சங்கத்தின் கலாச்சாரம் எங்களைத் தொட்டது. என்னவென்றால், என்ன நினைத்தாலும் என்ன செய்தாலும், எதைப் படித்தாலும் கூட நிறைய படிக்க வேண்டும் அது தேசத்திற்கு உதவிகரமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொண்டாலும் அதிகம் செய்து அது தேசத்திற்கு உதவிகரமாக இருக்க வேண்டும். இதைத் தான் அங்கே தொடர்ந்து கற்பித்து வந்தார்கள். சங்கம் அது மிகப்பெரிய ஒரு அமைப்பு. மேலும், அது தனது நூற்றாண்டை இந்த ஆண்டு கொண்டாடி வருகிறது.
அதோடு உலகத்திலே இத்தனை பெரிய, ஸ்வயம்சேவக அமைப்பு, இருப்பதாக நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. கோடிக்கணக்கான மக்கள் இதோடு இணைந்திருக்கிறார்கள். ஆனால் சங்கத்தினைப் புரிந்து கொள்வது அத்தனை எளிதானது இல்லை. சங்கத்தின் பணிகளைப் புரிந்து கொள்ள முயல வேண்டும். மேலும் சங்கம், தன்னைத் தானே, ஒரு, வாழ்கையின் குறிக்கோள் என்போம் இல்லையா, இது தொடர்பாக, ஒரு நல்ல வழியைக் காட்டுகிறது. இரண்டாவதாக தேசமே அனைத்தும் ஆகும்.
மேலும் மக்கள் சேவையே மகேசன் சேவை. இதைத் தான் எங்களுடைய, வேதகாலத்திலிருந்து கூறுவது எங்கள் ரிஷிகள் கூறியது ஸ்வாமி விவேகானந்தர் கூறியது, இதைத் தான் சங்கத்தவர்கள் கூறுகிறார்கள். ஸ்வயம்சேவகர்களிடம் கூறுவதெல்லாம், சங்கத்திலிருந்து நீங்கள் கற்ற பாடங்களை, ஒரு மணிநேரம் ஷாகாவில் இருப்பது அல்ல சீருடை அணிவது மட்டுமல்ல, நீங்கள் சமூகத்துக்காக உங்கள் பங்களிப்பை அளிக்கவேண்டும்.
இந்த உத்வேகத்தால், இன்று ஏராளமான பணிகள் எடுத்துக்காட்டாக, சில ஸ்வயம்சேவகர்கள் சேவாபாரதி என்ற சுயவுதவி அமைப்பை ஏற்படுத்தினார்கள். இந்த சேவாபாரதி ஏழைகள் வசிக்கும் பகுதிகள் அவர்களின் குடிசைப் பகுதிகள், இதனை அவர்கள் சேவா பஸ்தி என்கிறார்கள். எனக்குத் தெரிந்த வரையில் கூறுகிறேன், கிட்டத்தட்ட ஒண்ணேகால் இலட்சம், சேவை மையங்களை நடத்துகிறார்கள்.
எந்தவொரு அரசின் உதவியேதும் இல்லாமல், சமூகத்தின் உதவியோடு, அங்கே செல்வது குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருவது, அவர்கள் உடல்நலம் பற்றி அக்கறை போன்று பணியாற்றுகிறார்கள். நற்பண்புகளை சொல்லித் தருவது. அந்தப் பகுதியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளுதல். நீங்களே பாருங்கள் ஒண்ணேகால் இலட்சம் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல. அதே போல சில ஸ்வயம்சேவகர்கள், சங்கத்தில் பயிற்சி பெற்றவர்கள், அவர்கள் வனவாசி கல்யாண் ஆஸ்ரமத்தை நடத்துகிறார்கள்.
அவர்கள் காடுகளிலே வனம்வாழ் மக்களோடு மக்களாக வாழ்ந்து, வனவாசி மக்களின் சேவையில் இப்படி 70000க்கும் மேற்பட்ட, ஏகல் வித்யாலயாக்கள் ஓராசிரியர் பள்ளிகளை நடத்தி வருகின்றார்கள். மேலும் அமெரிக்காவிலும் சிலர் இருக்கிறார்கள், இவர்கள் பழங்குடிக்ளுக்காக, 10-15 டாலர்கள் நன்கொடை அளிக்கிறார்கள், இந்தப் பணிக்காக. அவர்கள் சொல்கிறார்கள், ஒரு மாதம் ஒரு கோகோ கோலா குடிக்காமல் இருக்க வேண்டும் என்றால், ஒரு கோகோகோலா குடிக்காமல், அந்தப் பணத்தை, ஓராசிரியர் பள்ளிக்குத் தருவோம்.
இப்படி 70000 ஓராசிரியர் பள்ளிகளை பழங்குடியினக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள். சில ஸ்வயம்சேவகர்கள், கல்வித் துறையில் மாற்றம் உண்டாக்க வித்யா பாரதி அமைப்பை ஏற்படுத்தி, சுமார் 25,000, பள்ளிகளை நடத்துகிறார்கள், தேசத்திலே. 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள் நான் கருதுகிறேன் கோடிக்கணக்கான மாணவர்களுக்கு, மிகக் குறைந்த கட்டணத்தில் கல்வி அளிக்கப்படுகிறது. நற்பண்புகளுக்கும் முதன்மை அளிக்கப்படுகிறது. களப்பணி அனுபவம் உள்ளவர்களால். திறன் மேம்பாட்டில் கவனம். சமூகத்துக்கு சுமையாக இருக்க கூடாது.
அதாவது…… வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும், அவர்கள் பெண்களாகட்டும் இளைஞர்களாகட்டும், தொழிலாளிகள் ஆகட்டும். ஒருவேளை, உறுப்பினர் அடிப்படையில் கூறவேண்டும் என்றால், பாரதீய மஸ்தூர் சங்கம், அதற்கு சுமார்…. 55000 சங்கக் கிளைகள் இருக்கின்றன. மேலும் கோடிக்கணக்கானோர் அதன் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். ஒருவேளை உலகத்திலே, இத்தனை பெரிய தொழிலாளர் சங்கம் இருக்காது என்று நினைக்கிறேன்.
கற்பித்தல் எப்படி இருக்கிறது? இடதுசாரிகள் எல்லாம், தொழிலாளர் இயக்கத்துக்கு வலு சேர்த்தார்கள். தொழிலாளர் இயக்கங்களின் கோஷம் என்னவாக இருக்கிறது? Workers of the World Unite. உலகத் தொழிலாளர்கள் ஒன்று சேருங்கள்!! ஒரு கை பார்க்கலாம்…இதுவே உணர்வு. ஆனால் மஸ்தூர் சங்கத்தினர் ஆர் எஸ் எஸ்ஸின் ஷாக்காக்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் என்ன கூறுகிறார்கள்?
அவர்கள் கூறுகிறார்கள், தொழிலாளர்களே, உலகத்தை இணையுங்கள். அவர்கள் கூறுகிறார்கள், உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!! இவர்கள் கூறுகிறார்கள் தொழிலாளர்களே, உலகை ஒன்றிணையுங்கள்!! எத்தனை பெரிய வித்தியாசம்……. வாக்கியத்தில் சொற்கள் இங்கே அங்கே மாற்றி இருந்தாலும் எத்தனை பெரிய, கருத்தியல் மாற்றம்!!
சங்கத்தின் ஷாகாவிலிருந்து வெளிப்பட்ட இவர்கள், தங்கள் விருப்பம் நாட்டம் இயல்புக்கு ஏற்ப பணியாற்றும் போது, இந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இவர்கள் ஆற்றும் பணியைப் பார்த்தீர்களென்றால், அப்போது நீங்கள், 100 ஆண்டுகளில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கமானது, பாரதத்தின், பகட்டுநிறைந்த உலகிலிருந்து விலகியிருந்து, ஒரு சாதகனைப் போல, அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறார்கள்.
இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.
(தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்)