December 6, 2025, 9:43 AM
26.8 C
Chennai

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

sivakasi corporation councellors boycot - 2025
#image_title

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக பாஜக உறுப்பினர் குற்றச்சாட்டு…

காங்கிரஸ் உறுப்பினர் மறுப்பு தெரிவித்ததால் பாஜக காங்கிரஸ் உறுப்பினரிடையே ஒருவருக்கொருவர் தாக்க முயற்சித்ததால் பரபரப்பு….

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் முற்றி மேஜையை தூக்கி வீசியதால் கலேபரமான மாமன்ற கூட்டம்…

மாமன்ற கூட்டம் முடிவடைந்து வெளியே வந்த பாஜக கவுன்சிலரை சூழ்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடும் வாக்குவாதம்-இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு- போலீஸ் பாதுகாப்புடன் பாஜக கவுன்சிலர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு….

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாமன்ற கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் துவங்கி நடைபெற்றது..

இந்தக் கூட்டத்தில் தீர்மானம் குறித்து விவாதம் துவங்கியது .அப்போது பாஜக மாமன்ற உறுப்பினர் குமரிபாஸ்கர் மாநகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து தேசிய கீதம் அவமரியாதை செய்யப்படுவதாகவும் மேயர் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கையில் பதாகை உடன் கேள்வி எழுப்பினார். அதற்கு அருகில் இருந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ரவிசங்கர் அதற்கு விளக்கம் அளித்து விட்டாச்சு என்று கூறினார்.

நான் உங்களிடம் கேள்வி கேட்கவில்லை மேயரிடம் தான் கேள்வி எழுப்பினேன் என்று பாஜக மாமன்ற உறுப்பினர் கூறினார் இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் பாஜக மாமன்ற உறுப்பினரின் கையில் இருந்த பதாகையை காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் பிடுங்கி எறிந்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்த சக கவுன்சிலர்கள் அவர்களிடம் தடுத்து நிறுத்தி பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் மன்ற பொருளின் மீதான விவாதம் துவங்கியது அப்போது திமுக மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிகா எழுந்து நின்று பேசத் துவங்கினார்.

மேயரிடம் கேள்வி எழுப்பும் போது அதற்கு அருகில் இருந்த திமுக மாமன்ற உறுப்பினர் ஜெயினுலாபுதீன் பதில் அளித்தார் நான் மேயரிடம் தான் கேள்வி எழுப்புகிறேன் உங்களிடம் கேட்கவில்லை என்று ஸ்ரீனிகா கூறினார் இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சக கவுன்சிலர்கள் எழுந்து நின்று மாமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மேயர் ஆணையாளர் பதிலளிக்க வேண்டும் மற்ற கவுன்சிலர்கள் பதில் அளிக்க வேண்டியதில்லை என்று கூறினர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. திமுக கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மாமன்ற உறுப்பினர் ஜெயினுலாபுதீன் மேசையை கீழே தள்ளிவிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மாமன்ற உறுப்பினரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டத்தை நடத்த அனுமதியுங்கள் என்று மாமன்ற உறுப்பினர்களிடம் ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்திய தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் அமைதியாக தொடர்ந்து நடைபெற்று நிறைவடைந்தது.

மாமன்ற கூட்டம் முடிவடைந்து வெளியே வந்த பாஜக கவுன்சிலர் குமரி பாஸ்கரை சூழ்ந்து கொண்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.‌ பாஜக கவுன்சிலரும் காங்கிரஸ் நிர்வாகிகளும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜக கவுன்சிலரை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தாக்க முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்புடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

கடந்த மார்ச் 11-ம் தேதி சிவகாசி மாநகராட்சி கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே வீட்டுமனை பிரிவுகளுக்கு அங்கீகாரம் கோரி 5 தீர்மானங்களுக்கு அனுமதி வழங்க கூடாது என மாமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பை தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு எதிராக மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட மாமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தம் செய்து  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories