railway news - 2026

மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள்
railway news - 2026
#image_title

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரையிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அருகே உள்ள பகத் கீ கோத்தி ரயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி மதுரை – பகத் கீ கோத்தி சிறப்பு ரயில் (06067) மதுரையில் இருந்து ஏப்ரல் 21 திங்கட்கிழமை காலை 10.45 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை மதியம் 12.30 மணிக்கு பகத் கீ கோத்தி சென்று சேரும். மறு மார்க்கத்தில் பகத் கீ கோத்தி – மதுரை சிறப்பு ரயில் (06068) பகத் கீ கோத்தியில் இருந்து ஏப்ரல் 24 வியாழக்கிழமை அதிகாலை 05.30 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 08.30 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், சூலூர்பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, கம்மம், வாரங்கல், பல்ஹார்ஷா, சந்திராபூர், வார்தா, தன்மண்டேல், பட்னேரா, அகோலா, மால்காபூர், புஷாவால், ஜால்கன், நந்துர்பர், உத்னா, அங்கலேஸ்வர், வடோடரா, ஆனந்த், சபர்மதி, மகேசேனா, படண், பில்டி, ராணிவாரா, மார்வார் பின்மால், மட்ரன், ஜலோர், மொகல்சர், சம்தாரி, லுனி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 12 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.