December 6, 2025, 12:07 AM
26 C
Chennai

சுமங்கலி கேபிள் விஷன், ரெட் ஜெயண்ட் வரிசையில்… ‘வானம்’!

vaanam - 2025

டின்சிப் – இது TNSIP 2025 என்கிற தமிழ் நாடு விண்வெளி கொள்கை 2025 என்பதின் விரிவாக்க சுருக்கம் ஆகும்.

சரி, அது என்ன விண்வெளி கொள்கை?

இது அடுத்த ஐந்து ஆண்டு திட்டமாக கொள்கையளவில் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதில் என்ன செய்ய இருக்கிறார்கள்? எதையெல்லாம் இதனுள் வகைப்படுத்த போகிறார்கள்?- என்பது குறித்தான விவாதங்கள் எழுந்தன வண்ணம் இருக்கின்றன.

10,000 கோடி ரூபாய் மூலதன முதலீடு. 10,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துவிட்டு தான் மறுவேலை என்பது போலான அறிக்கைகள்… முதல் ஆண்டில் 30 % மானியம். அதற்கு அடுத்த ஆண்டு 20% என்கிறார்கள்.

ரூபாய் 25 கோடிக்கு கீழுள்ள அதுபோலவே ஐந்து கோடிக்கு மேலுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு…. அவர்களுக்கு, சலுகை விலையில் பேட்டன் செய்து கொடுக்க போகிறோம். இதில் வரும் 50% தொகையை இந்த டின்சிப் ஏற்கும் என்கிறார்கள்.

ஐந்து ஆண்டு திட்டமாக உள்ளது என்றால், ஆண்டொன்றுக்கு ரூபாய் 2000 கோடி ரூபாய் வருகிறது. இதில் மேற்சொன்ன விகிதாசார முறைப்படி, ரூபாய் 25 கோடி ரூபாய்க்கு கீழ் வருபவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால் சுமார் 80 நிறுவனங்களும் ஐந்து கோடிக்கு மேல் என்பதாக எடுத்துக் கொண்டால் சுமார் 400 நிறுவனங்களும் விகித மாறிலி முறையில் பகுப்பு செய்யும் பட்சத்தில் 220 முதல் 310 நிறுவனங்கள் வரும்.

ஆக இத்தனை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இருக்கின்றனவா அல்லது அடையாளங் காணப்பட்டு இத்திட்டம் செயல் பாட்டிற்கு கொண்டு வந்து இருக்கிறார்களா என்பது குறித்தெல்லாம் எந்த ஒரு விளக்கும் இல்லை.

இவையெல்லாம் போக… சபரீசன் முன்னெடுத்து செயல்படுத்தி வரும் வானம் என்கிற அவரது நிறுவனத்தின் உறுதுணையாகவே இந்த விண்வெளி கொள்கை வெளியிடப்பட்டுள்ளது என்கிற ரீதியிலான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு விவாத பொருளாகி வருகிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை.

சரி இதில் பிரதான சர்ச்சை என்ன? விஷயம் கொஞ்சம் விவகாரமாகி இருக்கிறது.

நம் தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பலவும் ஏரோ டைனமிக் மற்றும் அது சார்ந்த ட்ரோன் டெக்னாலஜி மற்றும் AI என்கிற செயற்கை நுண்ணறிவு துறையை சார்ந்தே இருக்கிறது. அடுத்ததாக வரவிருக்கும் இருபத்தி ஐந்து ஆண்டுகள் முதல் நாற்பது ஆண்டுகளுக்கு இத்துறையே கோலோச்சப்போகிறது என கணித்து வைத்திருந்தார்கள்.

ஏற்கனவே இத்துறையில் நடிகர் அஜித் குமார் தலைமையில் இயங்கும் குழு கிட்டத்தட்ட கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு விதத்தில் இயங்கி… தானியங்கி வர்த்தக சிறு விமானங்கள், ஏர் டாக்ஸி போன்றவற்றில் முன்னணியில் இருக்கிறார்கள். மத்திய மாநில அரசுகளின் அனுமதிக்காக காத்து நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்திருக்கிறது என்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க….
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து புதியதாக விண்வெளி ஓடத்தை நிர்மாணித்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி காண்பித்திருக்கின்றார்கள். அது போக செயற்கை கோள் ஏவு வாகனத்தை விண்ணில் ஏவிய நிகழ்வும், அது இந்திய அளவில் முழுக்க முழுக்க தனியார் ஏவிய முதல் செயற்கை கோள் ஏவு வாகனம் என்கிற சாதனையை ஏற்படுத்தியது.

நம் ஊடகங்களில் இவையெல்லாம் பெரிய அளவில் செய்தியாக வரவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் சென்னையில் மாத்திரம் இன்றைய தேதியில் சுமார் 82 தனியார் நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் பாணியில் கடந்த ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக 29 நிறுவனங்களின் மதிப்பு ஒவ்வொன்றும் குறைந்து 14 முதல் 20 கோடிகளாக அடையாளம் காண்பித்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் வருடாந்திர கணக்கு அடிப்படையில்.

இவர்கள் அனைவரும் ஆரம்பித்த காலத்தில் அதாவது ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ஒரு சில ஆயிரங்கள் மட்டுமே மூலதன முதலீடாக காண்பித்து கொண்டு இருக்கிறார்கள். சரியாக சொல்வதென்றால் கொரானா பெரு நோய் தொற்று காலத்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் ஆகும். இன்று மிகப் பெரிய அளவில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார்கள் என்பதற்கு மூலதன மதிப்பு உயர்வே சான்று.

மேற்சொன்ன நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை நூறுக்கும் குறைவாகவே இருக்கின்றது, அவர்கள் அனைவரும் முப்பது ஐந்து வயதினருக்கு கீழே என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் வந்த போதான விளைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

புரிந்து கொள்ள முடிந்தால் சரி. விவரித்து எழுதும் எண்ணம் இல்லை. ஆனால் விஷயங்கள் மாத்திரம் அது ஒட்டியே நடக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

எல்லாவற்றையும் நல்ல விதமாகவே எடுத்து கொள்ள வேண்டியது தான்….. ஆனால் இப்படியான ஒரு சந்தேகமும் இருப்பதாக கொண்டால்! இதனால் ஏற்படும் விளைவுகளையும் நாம் அனுமானிக்க வேண்டியிருக்கிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் கண்டுபிடிக்கப்படும் புதிய புதிய பங்களிப்பாளர்களின் வர்த்தக வாய்ப்பு ஒரு புறம் இருக்க…. அவற்றுக்கான பேட்டன் எனப்படும் அறிவு சார் காப்புரிமை., அதன் ஊடாக வரும் அறிவு சார் சொத்துரிமை வேறெங்கோ மடைமாற்றம் செயப்படுவது கண்கூடாக பார்க்க முடிகிறது. போதாக்குறைக்கு இவர்கள் போல் உள்ளவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் நிழலுருவங்களின் கைகளுக்கு செல்வதும் நன்றாக தெரிகிறது.

இதன் பின்னணியில் பணப்புழக்கம் என்பதும்….. மிகப் பெரிய சுழலுக்குள் நம்மை இழுத்து விடுவதால் மேற்படியான விஷயங்களை வழி நடத்த…. கண்காணிக்க… எந்த ஒரு வழிமுறைகளும் தற்சமயம் வரையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இதில் தென்படவில்லை. ஏற்கனவே ஸ்டிக்கர் பொட்டு அழிச்சாட்டியம் தனி.

இதில் கொள்கை அளவிலேயே ஏகப்பட்ட சில்லுண்டு வேலைகளின் அஸ்திவாரம் தெரிகிறது. ஆக இது நல்லதா… கெட்டதா… தெரிலேயேப்பா…!!
சுடாமல் சொல்லுங்கள் பார்க்கலாம். இல்லை விண்வெளி நாயகன் பட்டம் பெற்றவரின் வார்த்தையில் விளக்கம் சொன்னாலும் சரி.

எப்படியும் ஒன்றும் விளங்கப் போவதில்லை…! ஆனால் ஊர்ஜிதமாகிவிடும். புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் பாருங்கள்.

  • ‘ஜெய் ஹிந்த் ஸ்ரீ ராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories