அமெரிக்கா ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் டெல் போட்ரோவை வீழ்த்தி குரோஷியா நாட்டைச் சார்ந்த நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இதுவரை ஜோகோவிச் ஒட்டுமொத்தமாக 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் சுவிச்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரபேல் நடால் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்சை வீழ்த்திய நவோமி ஒசாகா, கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானியர் என்ற சாதனையை வசப்படுத்தினார்.எதிர்பாராத தோல்வியால் கண்ணீர் விட்டு அழுத செரீனா பின்னர் தன்னை தேற்றிக் கொண்டு இளம் சாம்பியனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Popular Categories




