முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

vandematharam backim chandrar - 2026

இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி, தேசியப் பாடலும் தேசிய கீதமும் இணைந்து இசைக்கப்படும் போதெல்லாம், தேசியப் பாடலின் அதிகாரப்பூர்வ வடிவத்தில் உள்ள அனைத்து ஆறு சரணங்களும் முதலில் இசைக்கப்பட வேண்டும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, குடியரசுத் தலைவர் வருகை, தேசியக் கொடி ஏற்றம், ஆளுநர்களின் உரை மற்றும் பிற அதிகாரபூர்வ நிகழ்வுகள் போன்ற முக்கிய அரசு விழாக்களில் இந்த முழுமையான ஆறு சரணங்கள் கொண்ட வடிவம் பாடப்படவோ அல்லது இசைக்கப்படவோ வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களின் கீழ், குடிமை விருது வழங்கும் விழாக்கள், அதிகாரப்பூர்வ அரசு விழாக்கள் மற்றும் அரசால் ஏற்பாடு செய்யப்படும் பிற நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் வருகை தரும்போதும் அங்கிருந்து புறப்படும்போதும் தேசியப் பாடலின் அதிகாரப்பூர்வ வடிவம் இசைக்கப்பட வேண்டும். மேலும், அகில இந்திய வானொலி (ஆகாஷ்வாணி) மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாகக் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவதற்கு முன்னரும் பின்னரும், அணிவகுப்பின்போது தேசியக் கொடி கொண்டு வரப்படும்போதும் இது இசைக்கப்பட வேண்டும். தேசியப் பாடல் இசைக்கப்படும் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் ‘கவன நிலை’யில் (attention posture) நேராக நிற்க வேண்டும் என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

இது தொடர்பாக, கடந்த 9ம் தேதியிட்ட அறிவிப்பில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அதிகாரபூர்வ அரசின் முக்கிய விழாக்களில், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தேசியப் பாடலான வந்தேமாதரம் பாடலே முதலில் பாடப்பட வேண்டும். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதை தெளிவாக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், மாநிலப் பாடல் இவற்றுடன் பாட நேர்ந்தாலும், தேசியப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என்பதை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. அதனுடன், தேசியப் பாடலையும் மாநிலப் பாடலையும் எப்படி உச்சரிக்க வேண்டும், எத்தனை கால அவகாசத்துக்குள் பாடப்பட வேண்டும் என்பது குறித்து விரிவான அறிக்கையையும் அளித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

Topics

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories