புது தில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வற்புறுத்தி நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் அதிமுக., உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில் பாமக., எம்பி., அன்புமணியும் திமுக., எம்.பி.க்களும் கூட கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆகியவை ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்ற கோரிககையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு, மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளன. ஆனால், அவையை தொடர்ந்து நடத்த விடாமல் அதிமுக., உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், நிரவ் மோடி உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அவையில் கூச்சல் குழப்பம் ஆரவாரம் நீடிப்பதால், நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப் படாமல் நீட்டிக்கப் பட்டு வருகிறது. இதற்கு அதிமுக.,வை பாஜக., தூண்டிவிட்டு, அவையில் கூச்சல் குழப்பத்தை நீடிக்கச் செய்வதே காரணம் என்று அதிமுக.,வின் மீது பழியைப் போட்டு, தமிழக எம்.பி.க்களின் காவிரி குறித்த முழக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளது சமாஜ்வாதி கட்சி.
அக்கட்சியின் எம்பி., ராம்கோபால் யாதவ், எதிர்க் கட்சிகள் விவாதத்துக்கு தயாராகவே இருக்கின்றன. ஆனால் அதிமுக.,தான் மத்திய அரசின் தூண்டுதலில் அவையை நடத்தவிடாமல் செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Opposition is ready for discussion on no confidence motion but it seems AIADMK is acting on behest of Central Govt and not letting the house function: Ramgopal Yadav,Samajwadi Party MP #BudgetSession pic.twitter.com/49jtBHe5N0
— ANI (@ANI) March 19, 2018