ஸ்ரீரங்கம்: திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம ஸ்ரீரங்கராமானுஜ மகாதேசிகர் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமி, திங்கள்கிழமை இன்று நண்பகல் 12.31 மணி அளவில் திருநாடு அலங்கரித்தார் (முக்தியடைந்தார்).
சென்னையில் உள்ள ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் இருந்து ஸ்வாமியின் பூதவுடல் நாளை பிருந்தாவனப் பிரவேசம் செய்யப் படவுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து அவரது திருமேனி ஸ்ரீரங்கத்துக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அவரது அந்திமக் கிரியைகள் நாளை ஸ்ரீரங்கத்தில் மேற்கொள்ளப் படும் எனக் கூறப்படுகிறது.