
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் பழமாக பலாப்பழம் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள சட்டசபையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மா, பலா, வாழை என முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் கேரளத்தில் அதிகம் விளைவது. அதன் ஒருவகையில் சக்கப் பழம் என மக்கள் ஆசையுடன் அழைத்து மகிழ்கிறார்கள். சுவை கூடிய பலாப்பழங்கள் கேரளத்தின் மலைத்தோட்டங்களில் வெகுவாக விளைகின்றன. பலாப்பழம் இன்றி விழாக்கள் நிறைவுறாது கேரளத்தில்.
இந்நிலையில் கேரளத்தின் அடையாளமாகத் திகழும் பலாப்பழத்தை மாநிலத்தின் பழமாக அறிவித்துள்ளது கேரள அரசு! இதற்கான அறிவிப்பும் நேற்று கேரள சட்டசபையில் வெளியிடப்பட்டது.



