அதிமுகவின் தனி அணியாக செயல்பட்டு வந்த டிடிவி தினகரன் சமீபத்தில் மதுரையில் நடந்த பிரமாண்டமான கூட்டம் ஒன்றில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை ஆரம்பித்தார். இந்த அமைப்பு தற்காலிகமானது என்றும், அதிமுகவை மீட்டெடுப்பதே தங்களது நோக்கம் என்றும் தினகரன் கூறி வந்தார்.
இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவராக டிடிவி தினககரன் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த அமைப்பிற்கு சசிகலா தான் பொதுச்செயலாளர் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
மற்ற கட்சிகளை போலவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் குடும்ப கட்சியாக மாறி வருவதாக இக்கட்சியின் தொண்டர்கள் முணுமுணுத்து வருவதாக கூறப்படுகிறது



