புது தில்லி, ஜன. 14: தில்லி கண்டோன்மென்ட் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நந்த் கிஷோர் வெற்றி பெற்றார். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அக்கட்சியினர் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அப்போது அவர்களில் ஒருவர், ரூபாய் நோட்டுகளை அங்கிருந்தவர்களை நோக்கி வீசினார். இதனால், அப்பகுதியில் ரூபாய் நோட்டுகள் சிதறின. இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர், ரூபாய் நோட்டுகள் வீசிய நபரை இடைநீக்கம் செய்துவிட்டதாக முதலில் அறிவித்தார். ஆனால், பின்னர் அந்த நபர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் அல்ல என்று அக்கட்சி விளக்கம் அளித்தது. முன்னதாக தில்லி கண்டோன்மெண்ட் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்ட 8 இடங்களில், ஒன்றில் வெற்றி பெற்றது.

