தன்னிறைவு இந்தியா திட்டம் : நிதி அமைச்சரின் 2ஆம் கட்ட அறிவிப்புகள்! விவசாயக் கடன் வட்டி தள்ளுபடியில் இருந்து…

nirmala seetharamanji - 2026

சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ் 2வது கட்ட திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா அறிவித்தார். செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரண்டாம் கட்ட திட்டங்கள் குறித்து கூறியவை…

இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள், சிறு விவசாயிகள் தெருவோர வியாபாரிகள், சிறுவணிகர்கள் போன்றோருக்கு இன்று திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

3 திட்டங்கள் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவும், ஒன்று தெருவோர தொழிலாளர்களுக்காகவும், 2 திட்டங்கள் சிறு விவசாயிகளுக்கும் உள்ளது. விவசாயிகளுக்கு இன்னும் பல திட்டங்கள் இனி வரும் நாட்களில் வரும்.

2 மாதங்களில் 25 லட்சம் புதிய கிசான் கிசான் கிரெடிட் கார்டு வழங்கி 25 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களில் 3 கோடி விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் 4.22 லட்சம் கோடி அளவுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சிரமப்படாமல் இருக்க கடனை திருப்ப செலுத்தும் காலம் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 1 முதல் ஏப்.,30 வரை 86 ஆயிரம் கோடி அளவுக்கு 63 லட்சம் கடன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

நபார்டு வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு ரூ.29,500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட “தன்னிறைவு இந்தியா” திட்டத்தின் 2ம் கட்ட அறிவிப்புகளில் சில…

  • சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி
  • கிசான் அட்டைகள் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது
  • இடம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள்.
  • ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்க நடவடிக்கை.
  • மத்திய அரசின் அறிவிப்பால் 8 கோடி பிறமாநில தொழிலாளர்கள் பயனடைவர்.
  • புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரேசன் பொருட்களை வழங்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு இருக்கிறது.
  • நகர்ப்புறங்களில் வீடற்றவர்களை தங்கவைக்கும் முகாம்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்படுகிறது
  • ஊரடங்கு காலத்தில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் ஊதியமாக ரூ.10,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • 100 நாட்கள் வேலை திட்டத்தின்கீழ் 14.62 கோடி மனிதவேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன
  • ரூ.6700 கோடி மாநில அரசுகளுக்கு விவசாய கொள்முதலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் 3 கோடி விவசாயிகளுக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.
  • ரூ. 4.22 லட்சம் கோடி அளவுக்கு கடன்கள் வழங்கப் பட்டுள்ளன.
  • ஊரக கிராமப்புற வங்கிகளுக்கு நபார்டு மூலம் ரூ.29,500 கோடி கடனுதவி
  • புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 3 திட்டங்களும், தெருவோர வியாபாரிகளுக்கான ஒரு திட்டமும் அறிவிக்கப்படுகிறது.
  • ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 4,200 கோடி வழங்கப்பட்டுள்ளது
  • விவசாயிகளுக்கு ரூ. 30,000 கோடி அவசரகால கூடுதல் நிதி – நபார்டு மூலம் வழங்கப்படும்.
  • கிராம வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த நிதி வழங்கப்படும். 3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
  • கிஷான் கிரடிட் கார்டு திட்டத்தில் விவசாயிகளுடன் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்புவர்கள் சேர்ப்பு.
  • விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள் சுமார் 2.5 கோடி பேருக்கு கிஷான் கிரடிட் கார்டு மூலம் ரூ.2 லட்சம் கோடி கடன்
  • 6 லட்சம் முதல் 18 லட்சம் வரையிலான வருட ஊதியம் பெறுவோர்களுக்கான நலத் திட்டம் அறிவிப்பு
  • நடுத்தர குடும்பங்கள் வீடு வாங்குவதற்கான கடன் வசதி 2021ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்படும்.
  • இதுவரை 3.3 லட்சம் குடும்பங்கள் பலன் பெற்றுள்ளன.
  • கடன் கால நீட்டிப்பால் 2.5 லட்சம் குடும்பங்கள் பலன் பெறும்.
  • அனைத்து துறைகளிலும் பெண்கள் இரவு ஷிப்ட் பணியாற்ற அனுமதி
  • குறைந்தபட்ச ஊதியம் அனைவருக்கும் பொதுவானதாக மாற்றப்படும்
  • அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவ சோதனையை கட்டாயம்.
  • பத்து ஊழியர்களுக்கும் கீழ் உள்ள நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ. பலன்களை வழங்கப்படும்.
  • சாலையோர வியாபாரிகள் எளிதாக கடன் பெற விரைவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
  • ரூ.10 ஆயிரம் துவக்க நிலை செயல்பாட்டு மூலதனத்துடன் சாலையோர வியாபாரிகளுக்கு கடன்
ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories