முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10.10 கோடி வழங்கிய சக்தி மசாலா நிறுவனம்!

அடடே... அப்படியா? தமிழகம் லைஃப் ஸ்டைல் வணிகம்
sakthi masala - 2026

சக்தி மசாலா நிறுவனம் இரண்டாம் கட்டமாக ரூபாய் 5 கோடியே 10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது

சக்தி மசாலா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:

உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் சக்தி மசாலா நிறுவனம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அமைந்துள்ள தமிழக அரசு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அம் முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு கடந்த மார்ச் 30ஆம் தேதி தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5 கோடி வழங்கியது.

கடந்த 11ஆம் தேதி அன்று இரண்டாவது முறையாக ரூபாய் 5 கோடியே 10 லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது. இதுவரையில் சக்தி மசாலா நிறுவனம் முதலமைச்சரின் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மொத்தம் ரூபாய் 10 கோடியே 10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கி அரசுக்கும் தமிழக மக்களுக்கும் என்றென்றும் உறுதுணையாக உள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறது

தமிழகத்தில் முதலமைச்சரின் சீரிய தலைமையின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் இரவு பகலாக ஓய்வின்றி சிறப்பாக பணிபுரிந்து வருவதை சக்தி மசாலா நிறுவனம் இந்த தருணத்தில் நினைவு கூர்ந்து அனைவருக்கும் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது … என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

  • ரவிசந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.