இஸ்ரோவின் தலைவராக ஏ.எஸ்.கிரண்குமார் நியமனம்

Published:

தில்லி, ஜன.13: இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை செயலாளராகவும், இஸ்ரோவின் தலைவராகவும் ஏ.எஸ். கிரண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவைக் குழு, கிரண் குமாரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது. பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள கிரண் குமார், இஸ்ரோவில் 1975ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இஸ்ரோவின் முக்கிய சாதனை திட்டங்களான சந்திராயன், செவ்வாய் கிரக ஆராய்ச்சி ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு இப்பதவியிலிருப்பார்.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

Related articles

Recent articles

spot_img