
- செகந்திராபாத் ரயில்வே ஸ்டேஷன்…
- ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்து கீழே விழுந்த பெண்மணி…
- பிறகு என்ன நடந்தது? வீடியோ வைரல்…
ரயில் ஓட்டம் எடுக்கும் சமயத்தில் ஒரு பெண்மணி பிளாட்பாரத்தில் ஓடிவந்தார். ஓட்டமாக ஓடிவந்து ஒரு போகியில் ஏறுவதற்கு முயற்சித்தார்.
ஓடும் ரயிலில் ஏறுவது என்பது மிகவும் ஆபத்தானது. இது தொடர்பாக ரயில்வே ஸ்டேஷனில் அறிவிப்பு கூட செய்திருப்பார்கள். ஆனால் சிலர் கடைசி நிமிடத்தில் ரயில் நகர ஆரம்பித்த பின்பு ஏற முயற்சிப்பார்கள். இவ்வாறு விபத்துக்கு ஆளானவர்கள் கூட உள்ளார்கள்.
இப்போதும் அதே போல் ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்த ஒரு பெண் கீழே விழுந்தார். இது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாயின.
ஆனால் ரயில்வே போலீஸ் சரியான நேரத்தில் ஒரு உதவிக்கு ஓடி வந்து அவரை இழுத்து பிளாட்பாரத்தில் போட்டதால் பெரும் விபத்து தப்பியது.
இந்த சம்பவம் தெலங்காணாவில் உள்ள சிகிந்தராபாத் ரயில்வே ஸ்டேஷனில் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் டுவிட்டரில் ஷேர் செய்துள்ளது.
இந்த வீடியோவில் ட்ரெயின் கிளம்பிய பின்பு ஒரு பெண் பிளாட்பாரத்தில் ஓடி வருகிறார். ஓட்டமாக ஓடி வந்து ஒரு பெட்டியில் ஏறுவதற்கு முயற்சிக்கிறார். ஆனால் ரயில் நகர்ந்து கொண்டிருந்ததால் தடுமாறி கீழே விழுந்தார்.
பிளாட்பாரத்தில் இருந்த ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் தினேஷ் சிங் இதனை கவனித்து உடனடியாக அந்தப் பெண்ணை காப்பாற்றுவதற்காக ஓடி வந்தார். இந்தக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் ரயிலை நிறுத்த வேண்டும் என்று கூச்சலிட்டனர். அதற்குள்ளாகவே அங்கு வந்து சேர்ந்த ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் தினேஷ்சிங் அந்த பெண்ணை பிளாட்பாரத்தின் மீது பிடித்து இழுத்து கிடத்தினார்.
அதனால் அவர் உயிரோடு தப்பினார். அதன் பின் ரயில் நின்று போனது. இந்த வீடியோவை பார்த்த மக்கள் ஆர் பி எஃப் கான்ஸ்டபிளை பாராட்டினர். மிக வேகமாக உதவிக்கு வந்ததால் பெண் உயிர் காப்பாற்றப்பட்டது என்று குறிப்பிட்டனர்.
சிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.