மின் இணைப்பு இருந்தால் மண்ணெண்ணெய் மானியம் ரத்தாகும்!

இந்தியா

புதுதில்லி, ஜன.13: மின் இணைப்பு உள்ள வீடுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் விநியோகிப்பதை நிறுத்துமாறு அரசுக்கு பரிந்துரைகள் வந்துள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். தில்லியில் நடைபெற்ற எரிசக்தி பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2011-ல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, மின் இணைப்பு உள்ள வீடுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கக் கூடாது என்று அரசுக்கு பரிந்துரைகள் வந்துள்ளதாகவும், இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதன் பலன் பொதுமக்களைச் சென்றடையவில்லை எனப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மண்ணெண்ணெய் மானியத்துக்காக அரசு, ரூ.30,575 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.