பைக்கில் சுற்றக் கூடாது, வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என மகேந்திர சிங் தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளதாக தெரிகிறது.
தோனிக்கு மிகவும் பிடித்தது பைக் ரைட்… அதற்கே கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் தோனி அப்சட் ஆகியுள்ளாராம்.
சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியை முன்னிட்டு அப்பகுதியை சுற்றியுள்ள ரயில் நிலையங்களான சேப்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, பார்க் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
போட்டியை முன்னிட்டு ரசிகர்கள் செல்வதற்கு இரவு நேரத்தில் இரண்டு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னையில் நடைபெறும் IPL போட்டிக்கு செருப்புகள் அணிந்து வருவதற்கு தடையில்லை. பயன்படுத்துவோம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஜ