காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர். அனுமதியின்றி வீட்டில் பட்டாசு விற்பனை செய்ததாக மதீன், மக்ரூதின் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சின்ன காஞ்சிபுரம் நாகலத்து தெரு பகுதியில் அனுமதியின்றி நாட்டு பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்து வந்த மைதீன் என்பவரது வீட்டில் திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. அந்தப் பகுதியே புகை மூட்டம் கண்டுள்ளது.
இந்த வெடிவிபத்தில் வீட்டில் மைதீனின் மனைவி, அவரது மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். வயதான மூதாட்டி ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு நேற்று இரவு உயிரிழந்தார்.
மேலும் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இரு சக்கர வாகங்களும் தீக்கு இரையாகின. இந்த வெடி விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
விஷ்ணு காஞ்சி போலீசார் உடனடியாக நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.




