சிபிஐ தனது நம்பகத்தன்மையை இழந்திருக்கிறது கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருப்பம்பாளையம் அப்பிபாளையம் புத்தாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுக்கள் பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களை பெற்றார் தம்பிதுரை.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் மாவட்ட திட்ட அலுவலர் திருமதி கவிதா கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுக ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் மீது சரியான ஆதாரங்கள் இல்லை என்பாதலே சிபிஜ சிறப்பு நீதிபதி ஒ.பி.சைனி விடுவித்தார். எனவே தமிழக முதல்வர் சிபிஐ விசாரிப்பதாலே பதவி விலகக் கூறுவது சரியல்ல . சிபிஐ என்ற விசாரணையை இனி யாரும் நம்பமாட்டார்கள் என கூறினார்.
வடமாநிலத்தவர் தமிழகத்தில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறித்து பேசி வருகிறார்கள் ஆனால் வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் 10 லட்சம் பேர்வேலைக்காக குடியேறி யிருக்கிறார்கள் இன்று டெல்லியில் இருந்து வெளிவரக்கூடியஆங்கில நாளேடு இன்று செய்தி வெளியிட்டுள்ளது என காண்பித்து தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் .
ஆளும் மத்திய அரசுமாநில அரசின் அதிகாரங்களை பறித்துவருகிறது மாநில அரசு வலிமையானதாக இருக்க வேண்டும் மாநில அரசுடன் அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்று கூறினார்.




