ரோஹிங்கியா அகதிகள் குறித்து எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்புக்காக இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்கள் தானிஷ் சித்திகி, அத்னான் அபிதி ஆகியோர்க்கு புலிட்சர் விருது தரப்பட்டுள்ளது.
புலிட்சர் விருது, உலகை உலுக்கிய அல்லது அரசியல் மாற்றங்களை சர்வசாதரணமாக கொண்டு வந்த வலிமை வாய்ந்த புகைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.
பர்மாவில் துரத்தப்பட்டு அகதிகளாக வெளியேறும் ரோஹிங்கியா அகதிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இது எங்கள் நாடு என்று வங்கதேசம் ரோஹிங்கியா அகதிகளை விரட்டும் நிலையில், அவர்கள் வாழ்விடமான பர்மாவும் அவர்களை விரட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரோஹிங்கியா அகதிகள் குறித்து எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்புக்காக இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்கள் தானிஷ் சித்திகி, அத்னான் அபிதி ஆகியோர்க்கு புலிட்சர் விருது தரப்பட்டுள்ளது. 



