கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

சற்றுமுன் தமிழகம்

vote - 2026

கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் ஏப்.27ஆம் தேதி நடைபெறுகிறது

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கைத் தொடர்ந்து இருந்தார். வழக்கை விசாரித்த மதுரை ஹைகோர்ட்டு கிளை, தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தேர்தல் நடவடிக்கைகளில் உயர்நீதிமன்ற தலையிட்டு தடை விதிக்க முடியாது என்று கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. தமிழக அரசு சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடத்த அனுமதி அளித்த போதிலும், தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. தேர்தலை நடத்தி விட்டு மே 3 ஆம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக மாநில கூட்டுறவு சங்க தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் 27ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.