எத்தனையோ சுவாரஸ்யங்களுக்கு மத்தியில் இன்றைய சுவாரஸ்யமாக மாறிப் போனது ஒரு தகவல்! திமுக., தலைவர் என மு.க. ஸ்டாலின் முன் மொழியப் பட்டு, எதிர்ப்பாளர் எவருமின்றி, போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்படும் நிலையில், அவரது சகோதரரும் குடும்பப் போட்டியாளருமான மு.க.அழகிரியை திமுக., தலைவராக்கி அழகு பார்த்துள்ளனர் விக்கிபீடியா வாசிகள்!
இணையதளத்தில் தகவல் தேடுவோர் அதிகம் பயன்படுத்துவது விக்கிபீடியா தகவல் தளம்தான்! அதில் உள்ள தகவல்களைக் கட்டுரைகள் என பள்ளிச் சிறார்களில் இருந்து கட்டுரைகள் எழுதுபவர்கள் வரை பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால், அந்தத் தகவல்கள் எல்லாமே யார் வேண்டுமானும் பதிவு செய்யக் கூடிய தகவல்களாக உள்ளன. எனவே பல நேரங்களில் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக் குறியாகி விடுவதுண்டு.
இந்நிலையில் திடீரென திமுக., தலைவராக மு.க.அழகிரியை போட்டு விட்டு, பின்னர் விக்கிபீடியா தகவலை மாற்றியது!
திமுகவின் தலைவர் மு.க.அழகிரி என விக்கிபீடியா இணையதளத்தில் குறிப்பிடப் பட்டதையடுத்து சர்ச்சை ஏற்பட்டது. பின் தகவலை நீக்கிய விக்கிபீடியா தற்போது திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் என குறிப்பிட்டுள்ளது.




