
ஐபிஎல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது, ஐபிஎல் போட்டிகளுக்கு விழுந்த அடியாகவே பார்க்கப் படுகிறது.
ஐபிஎல் போட்டிகளின் கடந்த சீசன் வரை இந்தப் போட்டிகளை சோனி நிறுவனம் ஒளிபரப்பியது. ஆனால் இந்த வருடம், ரூ.16,347.50 கோடிக்கு ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்பு உரிமையை வாங்கியது.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை டிவியில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியன் வரை குறைந்துள்ளது. ஒரு ஒப்பீட்டு அளவாக, கடந்த ஆண்டு 254.80 மில்லியன் பேர் போட்டிகளைப் பார்த்திருந்தனர். ஆனால் இந்த சீஸனில், கடந்த 8 போட்டிகளை 245.71 மில்லியன் பேர் மட்டுமே டிவியில் பார்த்துள்ளனர்.
இந்த முறை, சென்னையில் ஐபிஎல்., போட்டிகளை நடத்தக் கூடாது என்று போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் நேரில் சென்று போட்டிகளைப் பார்க்கும் வாய்ப்பு தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இல்லாமல் போனது. இதனால் டிவி., யில் போட்டிகளைப் பார்க்கும் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். மாறாக சரிந்துள்ளதாகத் தெரிகிறது.



