
விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்புக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவர் விஷ்ணு சதஷிவ் கோக்ஜே, உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டப்பட உள்ள இடத்தை பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர் பில்லியன்கணக்கான மக்களின் கனவாக உள்ள ராமர் கோயில் விரைவில் நிஜமாகும் என்றார்.
பின்னர் அவர் பிரபலான ஹனுமங்கர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். முன்னாள் நீதிபதியான விஷ்ணு சதஷிவ் கோக்ஜே, ஹிமாச்சல பிரதேசத்தின் கவர்னராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம ஜென்ம பூமி பகுதியில் உள்ள கோவில் அர்ச்சகர்கள் மற்றும் அலுவக நிர்வாகிகளுடன் விரிவான சந்திப்பு ஒன்றையும் அவர் நடத்த உள்ளதாக விஷ்வ ஹிந்து பரிசத் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி அவர், ராமர் கோயில் கட்ட பல ஆண்டுகளை கற்களை வடிவமைத்து வரும் பகுதியான ‘கார்யசேவக்புரம்’ பகுதியையும் அவர் பார்வையிட உள்ளார்.
இன்றைய பயணத்திற்கு முன்பேர் பாசியபாத்தில் இருந்து கிளம்பும் முன்பு லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் புதிய தலைவர், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அதிகளவிலான முஸ்லீம்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராமர் கோயில் கட்டும் பணியை முன்னெடுத்து செல்ல நாடுமுழுவதும் உள்ள சன்னியாசிகளிடம் பேசி உள்ளேன். ராமர் கோயில் குறித்த வழக்கின் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



