December 5, 2025, 3:58 PM
27.9 C
Chennai

மோடி தர்றதா சொன்ன அந்த ரூ.15 லட்சத்த நான் தர்றேன்… ஆனா…?

Rahul Gandhi Narendra Modi - 2025

மோடி தருவதாகச் சொன்ன ரூ.15 லட்சம் பணம் எங்கே என்று தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்க இயலாது என தகவல் ஆணையம் மறுத்தது.

இந்நிலையில், டிவிட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களில் இதற்கான விவாதங்கள் தூள் பறக்கின்றன. அவர்களில் ஒருவர் அந்தப் பணத்தை நானே தருகிறேன் என்று கூறி, ஒரு நிபந்தனையையும் போட்டிருக்கிறார். அவரது கருத்தும், டிவிட்டர் பதிவும்…

மோடி பதினைந்து லட்சம் தருவதாகச் சொல்லி தட்டை ஏந்தித் தெருத்தெருவாகச் சுற்றுபவர்கள் கவனிக்கவும். ரூ.15 லட்சம் பணமே தாரேன். ஆனால், மோடி மக்களுக்கு ஆளுக்குப் பதினைந்து லட்சம் பணம் தருவதாகச் சொன்னதை நிரூபித்து விட்டால். – என்று கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்த போது, பிரதமர் மோடி ”பாஜக வெற்றி பெற்றால், கருப்புப் பணம் மீட்கப்படும். அந்தப் பணம் நம் நாட்டில் உள்ள அனைவரின் வங்கிக் கணக்கிலும் உள்ள ரூபாய் 15 லட்சமாக இருக்கும்” என்று கூறினார். ஆனால் ஆட்சி முடிய இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், இன்னும் யாருடைய கணக்கிற்கும் 15 லட்சம் ரூபாய் பணம் வந்து சேரவில்லை என்று, பரபரப்பு குற்றச்சாட்டுகள் கூறப் படுகின்றன.

இந்நிலையில், இந்தப் பணம் எப்போது வரும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு 2016 நவம்பர் 16 ஆம் தேதி மோகன் குமார் சர்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தகவல் ஆணையம் பதில் அளிக்காமல் இருந்தது. தற்போது, இதற்கு பதில் அளிக்க முடியாது என்று தகவல் ஆணையம், மோகன் குமாருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. அதன்படி, இந்த விஷயம் ”தகவல்” வழங்கும் பட்டியலின் கீழ் வரவில்லை என்றும், இதுகுறித்த விவரம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் மீட்கப் பட்டால், அது ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் உள்ள ரூ.15 லட்சத்துக்கு சமமானது என்று மொடி கூறியதாகவும், அனைவர் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்று ஒருபோதும் மோடி பேசியதில்லை என்றும் பாஜக.,வினர் கூறி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுலோ, தேர்தல் பிரசாரங்களில், நாட்டு மக்களை ரூ.15 லட்சம் தருவதாகச் சொல்லி மோடி ஏமாற்றி விட்டார் என்றுதான் பேசிவருகிறார்.

2 COMMENTS

  1. The enormity of the problem created and nurtured by the most currupted Congress could not be guessed by any sane person leave alone our most good intentioned and very hard working Prime Minister. It is atrocious for a cheap and empty person like raga who shamelessly attaching ”GANDHI’ to his name to utter such markings.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories