ஓபிஎஸ்-இபிஎஸ் இரட்டையருக்கே இரட்டை இலை! தினகரன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு!

09 July17 Two leaves - 2026

புதுதில்லி: ஓபிஎஸ். இபிஎஸ்., ஆகியோர் அடங்கிய அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளது தில்லி உயர் நீதிமன்றம. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட இந்த வழக்கில், அதிமுக.,வுக்கு சாதகமாக வந்துள்ள தீர்ப்பால் ஆளும் தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர், சிலகாலம் அப்படியே இருந்த அதிமுக., பின்னர் இரண்டானது. தொடர்ந்து ஓபிஎஸ், சசிகலா என இரண்டு பிரிவாகப் பிரிந்து, அப்போது இரட்டை இலைச் சின்னத்தை ஓபிஎஸ்., உரிமை கொண்டாட, தேர்தல் ஆணையத்தால் சின்னம் முடக்கி வைக்கப் பட்டது.

பின்னர் சசிகலா அணியில் இருந்த ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் இணைந்து அதிமுக.,வை தூக்கி நிறுத்த, அதில் இருந்து வெளியேற்றப் பட்ட சசிகலாவின் சகோதரி மகன் டிடிவி தினகரன் பின்னாளில் அமமுக என்று தனிக்கட்சியைத் தொடங்கினார்

two leaves - 2026

அப்போது, இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

இருப்பினும், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இருவரும் இணைந்ததால், அவர்கள் இருவர் தலைமையிலான, அ.தி.மு.க.,வுக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில், தினகரன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், இரட்டை இலைச் சின்னத்தை அதிமுக.,வுக்கு ஒதுக்கியது செல்லும் என்றும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சரியானதே என்றும் கூறி, தினகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories