கர்நாடக தேர்தல் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்

இந்தியா சற்றுமுன்

WhatsApp Image 2018 04 26 at 2.00.51 PM - 2026 WhatsApp Image 2018 04 26 at 2.00.40 PM - 2026 WhatsApp Image 2018 04 26 at 2.04.37 PM - 2026

கர்நாடகா மாநிலம் அங்கோலா தொகுதியில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். மே12ம் தேதி நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக தெரு தெருவாக சென்று ராகுல் பிரச்சாரம் நடத்தி வருகிறார். ராகுலுடன் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவும் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உள்பட தலைவர்கள் பிரசாரம் நடத்த உள்ளனர். இந்த தேர்தல் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுக்குமே மிக முக்கியமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் பிரியங்கா காந்தியை கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அவரை கர்நாடகத்தில் பிரசாரம் செய்ய அழைத்து வர வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் கர்நாடக காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கோரிக்கையை பரிசீலித்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பிரசாரம் செய்வார் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திரா காந்திக்கு அரசியல் மறுவாழ்வு கொடுத்தது சிக்கமகளூரு தொகுதி தான். இதையடுத்து அந்த தொகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்க பிரியங்கா காந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா காந்தியின் வருகையை காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.