கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, காங்கிரஸ் கட்சி பல்வேறு பொய்மூட்டைகளை தற்போது அவிழ்த்து விட்டுவருகிறது. மத்திய அரசின் திட்டங்களை குறை சொல்லி சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பி வருகிறது.
அவற்றில் ஒன்றாக, தங்கள் ஐ.மு.கூட்டணி ஆட்சியில் ஒரு கழிப்பறையை ரூ.1750க்கு கட்டியதாகவும், ஆனால் தற்போதைய தே.ஜ.கூட்டணி ஆட்சியில் 6177 ரூபாய்க்கு கட்டுவதாகவும், இதில் ஊழல் நடைபெறுவதாகவும் டிவிட்டர் உள்ளிட்ட பதிவுகளில் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.
இது சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. காங்கிரஸுக்கு பதில் கொடுக்கும் விதமாக ஒருவர், ஒரு கழிப்பறை கட்ட ஆகும் செலவை பட்டியலிட்டுள்ளார்.
டாய்லெட் ஷீட் – ரூ.1,200
குறைந்தபட்ச தேவையான 6 சிமிண்ட் மூட்டைகள் = 1,800
அடிமானம், கட்டுமானம் = 2000
600 செங்கல் = 3,000
பிற செலவுகள் = 1000
மொத்தம் = 9000
இந்தப் பணியை காண்ட்ராக்ட்டில் மொத்தமாக செய்து கொடுக்கும் போது 25% கழிவு – குறைக்கப்படும். எனில்
9000 – 2250 = 6750
எனவே, பாஜக., சொல்லும் தொகைக்கு ஓரளவு சமமாக இந்தத் தொகை வந்துள்ளது.
அதுசரி… ரூ.1750க்கு உங்களால் என்ன கட்ட முடியும்? அல்லது கட்டியதாகக் கணக்கு காட்டி திடீரென்று இடிந்துவிட்டதாகக் கூறி அந்த 1750ஐயும் லபக்கிவிடுவீர்களா? என்று கேள்விகளை எழுப்புகிறார்கள் நெட்டிசன்கள்.
Cost of construction per toilet:
under UPA: Rs. 1750
under NDA: Rs. 6177
#ChhotaModi + #BadaModi = #SwachhBharat pic.twitter.com/HzNrVEk9Gx— Congress (@INCIndia) April 26, 2018