புது தில்லி: யுபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகின. சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தில் இருந்து, 60-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், தமிழகத்தை சேர்ந்த கீர்த்திவாசன், இந்திய அளவில் 27-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் திருச்சியில் படித்தவர். சென்னையை சேர்ந்த மதுபாலன், இந்திய அளவில் 71-வது இடமும், தமிழக அளவில் 2-ம் இடமும் பெற்றுள்ளார்.
இந்தத் தேர்வில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த அனுதிப் துரிசெட்டி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்தினார்.
2017ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வானவர்களின் பட்டியல் https://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஐஏஎஸ் தேர்வு இறுதி முடிவை மத்திய தேர்வு ஆணையம் வெளியிட்டது. ஐஏஎஸ் பிரதான தேர்வு எழுதிய 13000 பேரில் 2567 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்முகத் தேர்வில் பங்கேற்ற 2567 பேரில் 990 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.