சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு; தமிழக அளவில் கீர்த்திவாசன், மதுபாலன் முதல் இரு இடங்கள்!

Published:

Telanganas Durishetty Anudeep - 2026
புது தில்லி: யுபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகின.  சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தில் இருந்து, 60-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், தமிழகத்தை சேர்ந்த கீர்த்திவாசன், இந்திய அளவில் 27-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் திருச்சியில் படித்தவர். சென்னையை சேர்ந்த மதுபாலன், இந்திய அளவில் 71-வது இடமும், தமிழக அளவில் 2-ம் இடமும் பெற்றுள்ளார்.
இந்தத் தேர்வில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த அனுதிப் துரிசெட்டி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்தினார்.
2017ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வானவர்களின் பட்டியல் https://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஐஏஎஸ் தேர்வு இறுதி முடிவை மத்திய தேர்வு ஆணையம் வெளியிட்டது. ஐஏஎஸ் பிரதான தேர்வு எழுதிய 13000 பேரில் 2567 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்முகத் தேர்வில் பங்கேற்ற 2567 பேரில் 990 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img