போலீஸ் அகாதமி தேர்வு எழுதிய 122 ஐ.பி.எஸ் அதிகாரிகளில் 119 பேர் தோல்வி!

நாட்டின் நான்கு தூண்களில் மிக முக்கியமான தூண் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு. மிகவும் அடிப்படையான சட்டம் ஒழுங்கு, உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற பாடங்களில் 90% தோல்வி அடைந்துள்ளது நாடு என்றுதான் குறிப்பிட வேண்டும். காரணம், இந்தத் துறையில் தயார் செய்யப் பட்டிருக்கும் அதிகாரிகள் 90% பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

இந்தியத் தண்டனைச் சட்டம் , கிரிமினல் சட்டம் போன்ற பாடங்களிலும் கோட் அடித்திருக்கின்றனர். ஆனால் இப்படி தோல்வி அடைந்தாலும் இவர்கள் பணியில் சேரலாம்! ஃபெயிலான பாடத்தை  மூன்று வாய்ப்புகளுக்குள் எழுதி பாஸ் பண்ணியாக வேண்டும், இல்லையேல் வேலை காலி !

நம் நாட்டின் கல்வித்திட்டத்தின் சீரழிவைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது இந்தத் தேர்வு முடிவு! இந்நிலை தொடர்ந்தால் நாட்டின் நிர்வாகம் என்னவாகும் ?

தேசிய நலன் மற்றும் நம் நலன் கருதி, கல்வித் திட்டத்தை சீரமைக்கக் குரல் கொடுப்போம்! குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது!

Source: Times Of India

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.