பிரதமர் மோடி இன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவரது பேச்சை ஒரு மொழிபெயர்ப்பாளர் கன்னடத்தில் மொழி பெயர்த்து வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால், அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள், தங்களுக்கு மொழி பெயர்ப்பாளர் விளக்கம் தேவையில்லை என்றும், மோடியின் ஹிந்திப் பேச்சை தொடர்ந்து, இடைவெளியின்றி கேட்க விரும்புவதாகவும் கூறினர். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில், கன்னட மொழியை மையமாக வைத்து அரசியல் ரீதியாக காங்கிரஸ் பலன் பெற பல்வேறு பிரிவினை கருத்துகளைத் தெரிவித்து அரசியல் செய்து வருகிறது. இந்த நிலையில் கன்னடர்கள், தாங்கள் மோடியின் ஹிந்திப் பேச்சை தொடர்ந்து கேட்க விரும்புவதாகக் கூறி, மொழிப் பிரிவினைவாதிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அவற்றில் ஒரு கருத்து இது…
Wow !! As Modi speaks in Udupi and the translator relates his Hindi speech in Kannada, the crowd roars that they want to listen to Modi uninterrupted IN HINDI. Could not have been a greater rebuke of Congress & its ecosystem who divide Indians basis language/region. #NammaModi
— Akhilesh Mishra (@amishra77) May 1, 2018




