திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த சித்ரா பௌர்ணமி விழாவில் முக்கிய அம்சமாகத் திகழ்வது வசந்த உத்ஸவம். இதில் சிவபெருமான் மன்மதனை எரிக்கும் அற்புதக் காட்சி நடைபெற்றது.
காலை அய்யங்குளத்தில் தீர்த்தாஅரி நிறைவடைந்து, அருணகிரீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இரவு கோபால் பிள்ளையார் கோவிலில் மண்டகப்படி.
பக்தர்களுக்கு காட்சி அளித்த பெரியநாயகர், பராசக்தி அம்மன் திட்டிவாசல் வழியாக திருக்கோயில் மூன்றாம் பிராகாரம் உள்துறை அலுவலக மண்டபத்தில் எழுந்தருள மன்மதம் தகனம் நடைபெற்றது.






