கர்நாடகாவில் வரும் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 184 கர்நாடக எம்எல்ஏகளின் சொத்து மதிப்பு, கடந்த 2013ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும் போது 64% உயர்ந்துள்ளது என்று ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கட்சிகளை சேர்ந்த மற்றும் சுயட்ச்சை எம்எல்ஏக்கள் உள்பட 184 எம்எல்ஏகளின் சொத்து மதிப்பு கடந்த 2013ம் ஆண்டில் 26.92 கோடி ரூபாயாக இருந்தது, அது தற்போது 44.24 கோடி ரூபாயாக உள்ளது.
கர்நாடக தேர்தலில் ஐந்து பணக்கார எம்எல்ஏக்கள் போட்டியிடுகின்றனர். அவர்களின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் அளவு உயர்ந்துள்ளது. இதில் டி.கே.சிவகுமார், என்.நாகராஜு, ஷமனுர் சிவசங்கரப்பா, பிரியாகிருஷ்ணா மற்றும் தேஷ்பாண்டே ரகுநாத் விஸ்வநாத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.