ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக் ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனது கற்பனைத் திறனால் கடற்கரையில் அழகிய மணல் சிற்பத்தை வரைவார். பார்ர்வையாளர்களின் பாராட்டைப் பெறும் அந்தச் சிற்பத்தை தனது டிவிட்டர் பதிவில் வெளியிடுவார்.
இன்று சர்வதேச அன்னையர் தினம் என்பதால், அது குறித்த மணல் சிற்பத்தை வரைந்தார். வித்தியாசமாக, பாரதப் பிரதமர் மோடி தனது அன்னையை வணங்குவது போன்ற சிற்பத்தை அமைத்தார். இது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. டிவிட்டர் பதிவிலும் ஆயிரக்கணக்கில் லைக்ஸும் ரிடிவீட்டும் தூள் பறக்கிறது.
அன்னையர் தினம் என்பது உலக அன்னையர், தாய்மையை போற்றும் நாளாக அன்னா ஜார்விஸால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது. அன்னா ஜார்விஸ் அன்னைகளுக்காக பாடுபட்டவர் என்பதால், அவரை மையப்படுத்தி இந்த தினம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே 2ம் ஞாயிறன்று அன்னையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
On #MothersDay, My SandArt of Hon Prime Minister @narendramodi and his mother with message “Maa ki Mamta” at Puri beach in Odisha. pic.twitter.com/Fi83ldM7jz
— Sudarsan Pattnaik (@sudarsansand) May 13, 2018




