பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப் படுத்தப் படுவதே நல்லது என்று கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் தருவை.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், கர்நாடகத்தில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தொங்கு சட்டசபையே அமைந்துள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிறகான கூட்டணி ஆட்சி அமைந்தால், அது நிலையான ஆட்சியை வழங்குவது சந்தேகமே. எனவே, இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் படுத்துவதே சரியானதாக இருக்கும் என்றார்.




