புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் அரசின் மூன்று மாத செலவீனங்களுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை முதல்வர் நாராயணசாமி பேரவையில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, கூட்டத்தொடர் தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 2018 மற்றும் 2019-ம் ஆண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவும், அதுதொடர்பாக விவாதங்கள் மற்றும் மசோதாக்கல் தாக்கல் செய்யவும் இன்று சட்டப்சபை கூட உள்ளதாக பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜகவை சேர்ந்த மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை அவைக்குள் அனுமதிக்க மாட்டோம் என, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
அதே விவகாரம் இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மீண்டும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



