ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், எப்.ஐ.ஆர் பெறத் தேவையில்லை: போக்குவரத்து ஆணையர்

18 June10 Traffic polic - 2026ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலைப் பெற தமிழக அரசு புதிய வசதியை தொடங்கியுள்ளது. இதற்கான உத்தரவை போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ளார். இதன்படி ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், அதை மீண்டும் பெற எப்.ஐ.ஆர் பெறத் தேவையில்லை.
வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தங்கள் கவனக் குறைவால் ஓட்டுநர் உரிமம் தொலைந்து போனால் என்ன செய்வது என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே உள்ளது.
பொதுவாக ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், சம்பந்தப்பட்ட நபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவருக்கு புகார் மனு ஏற்பு சான்றிதழ் அளிக்கப்படும். இதற்கே 15 முதல் 20 நாட்கள் வரை காலதாமதம் ஏற்படும். அதன்பிறகே, அவர் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மீண்டும் புதிய தாக பதிவு செய்ய முடியும். இதன்பிறகு ஆர்டி, அந்த ஆவணத்தை சரிபார்த்து ஓட்டுநர் உரிமத்தை வழங்குவார். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள இடைத்தரகர்கள் ரூ.2000 வரையில் பெற்றுக் கொள்கிறார்கள்.
இந்நிலையில், தொலைந்து போன ஓட்டுநர் உரிமத்தை பெறும் முறையை எளிமைப்படுத்தி போக்குவரத்து ஆணையரகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.இணையதளத்தில் அதன்படி, தொலைந்துபோன ஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக நகல் (டூப்ளிகெட்) உரிமம் பெற www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் தொலைந்துபோன ஆவண அறிக்கை (Lost Document Report) என்ற பிரிவில் சென்று பதிவு செய்து, தாங்களே பிரிண்ட் எடுத்துக் கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதனால் வீண் அலைச்சலைத் தடுக்க முடியும். இடைத்தரகர்கள் பணம் பெறுவதையும் தடுக்க முடியும். வாகனப் பதிவு சான்று தொலைந்து போனாலும் இதே முறையை பின்பற்றி வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பின்பற்ற வேண்டுமென போக்குவரத்து ஆணையர் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த புதிய வசதியால் ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலை எளிதாக பெற முடியும். இதற்காக போலீஸார் சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ள மாட்டார்கள். இந்த ஓட்டுநர் உரிமத்தின் நகல் ஆவணம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த வசதி டெல்லியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories