வரும் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மும்பை வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, ஆயிரம் ஆட்டோக்களில் வரும் தொண்டர்கள் வரவேற்க உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை வரும் ராகுலை வரவேற்க ஆயிரம் ஆட்டோ டிரைவர்கள் முடிவு செய்துள்ளனர். இது சாதாரண மனிதர்கள் காங்கிரஸ் தலைவர் மீது கொண்டுள்ள உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், ராகுல் காந்தி சாதாரண மக்களின் விருப்பமான தலைவராக யுர்ந்து வருகிறார். இதனாலேயே சாதாரண மனிதர்கள் அவரை வரவேற்க முடிவு செய்துள்ளனர் என்றும் கூறினார்.
மும்பை வரும் ராகுல் காந்தி பூத் லெவல் பணியாளர்களிடம் பிராக்ஜெட் சக்தி என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக உரையாற்ற உள்ளார். இதன் மூலம் கடைநிலை ஊழியர்களுடன் கலந்துரையாடல் செய்ய உள்ளார்.



