காங்கிரஸ் தலைவர் ராகுலின் பிறந்தநாளையொட்டி, அமேதி தொகுதியில் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் மற்றும் தள்ளுபடி விலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. காங்கிரஸ் தலைவர் ராகுலின் 48-வது பிறந்தநாள் நேற்று, அக்கட்சியினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராகுலின் சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாவட்டத்தின் அமேதி தொகுதியில், ராகுலின் பிறந்தநாளையொட்டி, குறைந்த விலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டன. இதுமட்டுமல்லாது, அமேதி கிராம மக்களுக்காக, வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் 10 சதவீத தள்ளுபடியில் வழங்கப்பட்டன. பெட்ரோல் மற்றும் டீசல், இதேபோன்று குறைந்த விலையில் கிடைக்க, ராகுல் பிரதமராக வேண்டும் என்று பிறந்தநாள் கூட்டத்தில் அக்கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
ராகுலின் பிறந்தநாளையொட்டி தள்ளுபடி விலையில் பெட்ரோல்
Popular Categories



