சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்தித்து பேச மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது. இதனால் தனது சீன பயணத்தையே மம்தா பானர்ஜி ரத்து செய்துள்ளார். விமானம் புறப்பட சில மணிநேரங்கள் மட்டுமே இருந்த நிலையில், இந்த தகவலை கொல்கத்தாவில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் மம்தா அலுவலத்திற்கு தெரிவித்தனர். தகவல் அறிந்த மம்தா பானர்ஜி தனது பயணத்தை உடனடியாக ரத்து செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், வெறும் வர்த்தக குழுவினருக்கு தலைமை ஏற்று செல்ல விருப்பமில்லை என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ‘‘வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டதால் தான் சீன பயணத்திற்கு ஒப்புக் கொண்டேன். சீன அரசின் இந்த முடிவால் இருநாடுகளிடையேயான உறவு சீர்கெட்டு போய்விடக் கூடாது என்பதற்காகவே எனது பயணத்தை ரத்து செய்துள்ளேன்’’ எனக் கூறினார்
மம்தா பானர்ஜியின் சீனா பயணம் ரத்து
Popular Categories



