இந்நதாண்டுக்கான அமர்நாத் யாத்ரா வரும் இன்று தொடங்கவுள்ளது. இதற்காக ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.
ஸ்ரீநகர் அமர்நாத் கோவிலுக்குச் செல்ல இதுவரை ஒருலட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தின் தென் பகுதியில் இமயமலையில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக்கோயில். இந்தக் கோவிலில் வருடந்தோறும் ஜூன் மாதத்தில் பனி லிங்கம் ஒன்று இயற்கையாக உருவாகும். இந்த லிங்கத்தை தரிசிக்க நாடெங்கும் இருந்து பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வார்கள். இந்த யாத்திரை சுமார் 60 நாட்கள் நடைபெறும். இந்த வருடம் அமர்நாத் புனித யாத்திரை இன்று முதல் தொடங்க உள்ளது.



