பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய அமர்நாத் யாத்திரை!

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நிலையில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமர்நாத் குகை பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான புனித யாத்திரை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. பக்தர்களின் முதல் குழு ஜம்முவில் இருந்து அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பயணம் மேற்கொண்டுள்ளது.

முன்னும் பின்னும் ராணுவ வாகனங்கள் அணி வகுக்க பக்தர்கள் பல்டல் மற்றும் பாஹல்காம் அழைத்துச் செல்லப் படுகின்றனர். அதன் பிறகு அவர்கள் தனியாக பயணம் மேற்கொண்டு 3,880 அடி உயரத்தில் உள்ள இமய மலையில் பனியின் மீது நடந்து சென்று வழிபாடு செய்வர்.

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நிலையில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு இரண்டு லட்சம் பேர் யாத்திரை செல்ல முன்பதிவு செய்துள்ளனர். இதனிடையே யாத்திரை செல்கின்றவர்கள் எங்கள் விருந்தினர்கள். அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.

இன்று தொடங்கி உள்ள அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 26ஆம் முடிவடைகிறது.