முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் மனைவி தன்னை பாடகர் அங்கீத் திவாரியின் தந்தை தவறான நோக்கத்துடன் உரசியதாகக் கூறி அவரை கைப்பையால் தாக்கினார். காம்ப்ளியும், அவரது மனைவி ஆண்ட்ரியாவும் ((Andrea)) நேற்று மும்பையில் உள்ள மால் ஒன்றுக்குச் சென்றனர். அப்போது பாடகர் அங்கித் ((Ankit)) அவரது தந்தை ராஜேந்திரா ((Rajendra)), சகோதரர் அங்கூர் ((Ankur)) ஆகியோர் வந்திருந்தனர்.
இந்நிலையில் ராஜேந்திரா தன்மீது தவறான நோக்கத்துடன் உரசியதாக புகார் தெரிவித்து ஆண்ட்ரியா தனது கைப்பையால் அவரை தாக்கினார். இதையடுத்து காம்ப்ளிக்கும் பாடகர் அங்கீத் உள்ளிட்டோருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜேந்திரா மீது வினோத்காம்ப்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



