ஹஜ் குழுவுக்கு அரசால் வழங்கபட்டு வரும் ஆண்டு நிர்வாக மானியம் 30 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக உயர்த்தி வழங்கபடும் என்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி அறிவிப்பு வெளியிட்டார்.
ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் முஸ்லிம்கள் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தநிலையில் கடந்த 2012–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அளிக்கும் மானியத்தை 2022–ம் ஆண்டுக்குள் படிப்படியாக குறைக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.



