பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணைக்காக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி ஆஜரானார்.
கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்தவர் புகழேந்தி. சசிகலாவின் தீவிர ஆதரவாளரான இவர், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்து தர போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வரை புகழேந்தி லஞ்சம் அளித்ததாக புகார் எழுந்துள்ளது.
சசிகலா சிறையில் உல்லாச வாழ்க்கை வாழ்வதாக கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜியாக இருந்த பெண் அதிகாரி ரூபா வெளியிட்ட பரபரப்பு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறைத்துறை டிஐபி சத்யநாராயணா ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிக்கொண்டு சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்க ஒத்துழைப்பு கொடுத்ததாக ரூபா தெரிவித்தார். ரூபாவுக்கு எதிராக சத்யநாராயணா மான நஷ்ட வழக்கை தொடர்ந்தார்.



