கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 5000 கன அடியில் வெளியான தண்ணீர், தற்போது 3000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அணைக்கு நீர்வரத்து 3,956 கன அடியில் இருந்து 3,000 கன அடியாக குறைந்ததையடுத்து நீர் திறப்பும் குறைந்துள்ளது.



