அசாம் அரசுப் பணியாளர் தேர்வாணைய வேலை நியமனத்தில் நடந்துள்ள மாபெரும் ஊழலில் பாஜக எம்.பி.யின் மகள் ஒருவருக்கு முக்கியத் தொடர்பு இருப்பது வெட்கக்கேடாது, ஊழலைத் தடுக்கத் தவறியது கண்டனத்திற்குரியது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும், ஆளும் கட்சியியினரே அரசு வேலை நியமனத்தில் ஊழலுக்குத் துணைபோயிருக்கிறார்கள் என்பதோடு, வேலை நியமனத்தில் ஊழலைத் தடுக்கத் தவறியிருப்பது கண்டனத்திற்குரியது என்றார். மேலும், ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. மகள் கைது செய்யப்பட்டிருப்பது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.
அரசுப் பணியாளர் தேர்வாணைய வேலை நியமனத்தில் பாஜக எம்.பி.யின் மகளுக்கு தொடர்பு
Popular Categories



