மாநிலங்களவையில் எம்.பி.,க்கள் மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை கொண்டு செல்ல அனுமதி உள்ளது. பாராளுமன்றத்தில் வைபை வசதி உள்ளது. இதனை பாராளுமன்ற வளாகம், மற்ற பகுதிகளில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவைக்குள் பயன்படுத்த அனுமதி கிடையாது.
இந்நிலையில், மாநிலங்களவை தலைவர் வெங்கையா கூறுகையில், மாநிலங்களவைக்குள்ளும் வைபை வசதியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கொண்டு, அவைக்குள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. அரசு மற்றும் பாராளுமன்ற இணைய தளங்களை மட்டும் எம்.பி.,க்கள் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.



